மிளகு - பூண்டுக் குழம்பு

post-img

தேவையானவை :1. பூண்டு(உரித்தது) - ஒரு கப்2. தனியா - 3 டேபிள் ஸ்பூன்,3. மிளகு - 2 டேபிள்ஸ்பூன்,4. காய்ந்த மிளகாய் - 4,5. உளுத்தம் பருப்பு, சீரகம் - தலா 2 டீஸ்பூன்,6. கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன்,7. கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி,8. புளி - சிறிய உருண்டை,9. நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,10. கடுகு - அரை டீஸ்பூன்.11. உப்பு - தேவையான அளவு

செய்முறை :

முதலில் ஒரு பாத்திரத்தில் புளியை கரைத்து கொள்ளவும். கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை சிவக்க வறுத்து ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு பொடிக்கவும்.

சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும். கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும். மீதம் உள்ள எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும். சுவையான சத்தான பூண்டு - மிளகுக்குழம்பு ரெடி.


Ingridients:
1. Garlic(Peeled) - 1 Cup
2. Coriander Seeds - 3 Tbsp
3. Pepper - 2 Tbsp
4. Dried Red Chillies - 4
5. Blackgram, Cumin - 2 Tsp
6. Bengal Gram - 1 Tsp
7. Curry Leaves - Little
8. Tamarind - a small sized
9. Gingly oil - 1 Tbsp
10. Mustard - 1/2 Tsp
11. Salt - as needed


Method :
1. Soak tamarind for few minutes then filter the tamarind solution keep a side. In a pan add coriander seeds, pepper, dried red chillies, blackgram, bengalgram. Roast well and grind it fine powder.
2. Grind the fresh curry leaves and cumin. Add roasted powder, curry leaves paste , salt all together in tamarind solution. Mix  well without lumps.
3. Add oil in a pan then add garlic pods fry it until it turns golden then add tamrind solution, boil it well until oil seperates.Add oil in a pan , add mustard, curry leaves allow it to splutter. Sprinkle it on tamarind solution.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER