மல்லி சிக்கன்(Coriandre chicken)

post-img

தேவையானவை:

சிக்கன் துண்டுகள் -1 கிலோ

கொத்தமல்லி இலை -2கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)

புதினா இலை -1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது)

வெங்காயம் -3 (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது- 2 டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)

தயிர் - 250 மில்லி லிட்டர்

தனியா தூள் - 3 டீஸ்பூன்

சீரகத்தூள் - 11/2 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்

உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப

 

செய்முறை:

 

1.தயிரில் பாதி அளவு மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து சிக்கனை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

2.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி விழுதை வதக்கவும். பச்சைமிளகாய், சீரகம், தனியா தூள் சேர்த்து கிளறவும்.

3.சிக்கன் துண்டுகளை வடித்து கடாயில் சேர்த்து அதிக பட்ச தீயில் 5 நிமிடங்கள் வேக வைக்கவும். மீதமுள்ள தயிரை சேர்க்கவும். அதோடு கொத்தமல்லி இலை, புதினாவை சேர்த்து கிளறவும்.

  1. மூடியை மூடி சிக்கன் வேகும்வரை குறைந்த தீயில் வைத்திருக்கவும். வெந்ததும் இறக்கி பரிமாறவும். இப்போது சூடான தனியா சிக்கன் ரெடி.

Ingredients for Coriander Chicken :

Chicken Pieces - 1 kg,

Coriander Leaves - 2 Bunch(Washed and Chopped)

Mint Leaves - 1 Bunch(Chopped)

Onion - 3 (Chopped)

Ginger and Garlic paste - 2 Tsp

Green Chilies - 4 (Chopped)

Curd - 250 ml

Coriander Powder - 3 tsp

Cumin Powder - 1-1/2 tsp,

Chilli Powder - 1/2 tsp,

Salt and Oil - as required.

 

Method to make Coriander Chicken :

 

  1. Take a bowl and mix up the Curd , Chilli Powder and Salt well. Then add the chicken pieces in that mixture. Soak this mixture well for 15 minutes.
  2. Heat some Oil in a Pan and add garlic, ginger paste and fry it well. Then add the Green chilies, cumin, coriander powder along with them. Stir it well.
  3. Filter the Chicken and fry this in a frying pan in high flame then add the curd and  fresh coriander leaves and mint leaves and stir them well. Close the pan lid and boil it for few minutes in low flame.

Tasty Coriander Chicken is ready to eat.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER