தேவையானவை :
1. வரகு - 200 கிராம்,
2. உளுந்து - 50 கிராம்,
3. தேங்காய் - 1 கப்
4. வாழைப்பழம் - 1,
5. வெல்லம் - 100 கிராம்,
6. ஏலக்காய் - 1,
7. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. வரகையும் உளுந்தையும் அரைமணி நேரம் ஊறவைத்து வாழைப்பழம், தேங்காய், வெல்லம், ஏலக்காய், உப்பு என அனைத்தையும் தோசை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரண்டியால் மாவை ஊற்றி வெந்ததும் உண்ண சூடான சுவையான வரகு இனிப்பு பணியாரம் ரெடி.