தேவையானவை :
1. சாமை அரிசி – 4 கப்
2. உளுந்து – 1 கப்
3. வெந்தயம் – 1 மேசைக்கரண்டி
4. உப்பு – தேவையான அளவு
செய்முறை :
1. சாமை அரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை தனியாக ஊற வைத்துக் கொள்ளவும்.
2. நன்கு ஊறிய பின் அரிசியை தனியாகவும், வெந்தயம், உளுந்து இவை அனைத்தையும் ஒன்றாக அரைத்துக் கொள்ளவும்.
3. இவ்விரண்டு மாவையும் ஒன்றாக உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.5 முதல் 6 மணி நேரம் புளிக்கவிடவும். பின் இட்லித் தட்டில் இட்டு அவித்து எடுத்தால் சாமை இட்லி ரெடி..