தேவையானவை :
1. ராகி - 2 கிலோ
2. சோளம் - 2 கிலோ
3. கம்பு - 2 கிலோ
4. பாசிப்பயறு - 1/2 கிலோ
5. கொள்ளு - 1/2 கிலோ
6. மக்காசோளம் - 2 கிலோ
7. பொட்டுக்கடலை - ஒரு கிலோ
8. சோயா - ஒரு கிலோ
9. தினை - 1/2 கிலோ
10. கருப்பு உளுந்து - 1/2 அரை கிலோ
11. சம்பா கோதுமை - 1/2 அரை கிலோ
12. பார்லி - 1/2 கிலோ
13. நிலக்கடலை - 1/2 கிலோ
14. அவல் - 1/2 கிலோ
15. ஜவ்வரிசி - 1/2 கிலோ
16. வெள்ளை எள் - 100 கிராம்
17. கசகசா - 50 கிராம்
18. ஏலம் - 50 கிராம்
19. முந்திரி - 50 கிராம்
20. சாரப்பருப்பு - 50 கிராம்
21. பாதாம் - 50 கிராம்
22. ஓமம் - 50 கிராம்
23. சுக்கு - 50 கிராம்
24. பிஸ்தா - 50 கிராம்
25. ஜாதிக்காய் - 2
26. மாசிக்காய் - 2
செய்முறை :
1. ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் அரை நாள் ஊற வைக்க வேண்டும். தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி அரை நாள் கழித்து எடுத்தால், தானியங்கள் முளைவிட்டு இருக்கும். அவற்றை மூன்று நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, நான்கு மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார்.
2. இந்த சத்து மாவை கூழ் செய்து சாப்பிடுவதால், உடலுக்கு தேவையான சத்துகள் மற்றும் சக்தி கிடைக்கிறது. கார்போஹைட்ரேட், கொழுப்பு குறைவாக இருப்பதால் உடல் பெருக்காது. உடல் எடையை குறைக்க உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற உணவு. காலை, மாலை வேளைகளில் அவர்களுக்கு தரலாம். முதியோர்கள் இதை அருந்தும் போது உடனடி சக்தி கிடைப்பதை உணர முடியும். எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு.
Ingredients :
1. Bajra - 2 kg
2. Ragi - 2 kg
3. Corn - 2 kg
4. Whole Green Gram - 1/2 kg
5. Horse Gram - 1/2 kg
6. Maize - 2 kg
7. Roasted Gram - 1 kg
8. Soya - 1 kg
9. Millet - 1/2 kg
10. Black Gram Split - 1/2 kg
11. Samba Wheat - 1/2 kg
12. Barley - 1/2 kg
13. Peanut - 1/2 kg
14. Flakes - 1/2 kg
15. Sago - 1/2 kg
16. White sesame seeds - 100 gm,
17. Poppy Seeds - 50 gm,
18. Cardamom - 50 gm,
19. Cashew Nuts - 50 gm,
20. Chirongi Nuts - 50 gm,
21. Badam - 50 gm,
22. Oregano - 50 gm,
23. Dry ginger - 50 gm,
24. Pista - 50 gm,
25. Mutmeg - 2,
26. Quercus Incana(Maasikkai) - 2
Method:
1. Soak Bajra, Ragi, Corn, Whole Green Gram, Horse Gram like all cereals given in water for half a day. Then drain the water and keep them in muslin cloth and tied it. Take it out after half a day. It will be well sprouted. To keep them dry in the sun for three days. Take all the ingredients given to flour mill to grind. Dried it for four hours then now tasty nutrient flour is ready.
2. Eating porridge , the body gets necessary nutrients and energy. Helps to reduce body weight because it has low cholesterol and carbohydrate. Its perfect food for kids. Elder people feel its the power of food. Easy to digest.