தேவையானவை :
1. வரகு - ஒருகப்,
2. புளி - தேவையான அளவு,
3. கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்,
4. காய்ந்த மிளகாய் - 6,
5. தனியா - ஒரு டீஸ்பூன்,
6. பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை கடுகு - தாளிக்க,
7. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
1. தனியா, காய்ந்த மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து பொடித்துக் கொள்ள வேண்டும்.
2. குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வெந்தயம் தாளித்து புளிக் கரைசல், உப்பு, வறுத்த மிளகாய், தனியா பொடி,பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து அரை மணி நேரம் ஊற வைத்த வரகையும் சேர்த்து வேக வைத்து இறக்கவும்.
3. சுவையான, மணமான வரகு புளியோதரை ரெடி.....