தேவையானவை:
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 நறுக்கியது
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 11/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 11/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க தேவையானவை:
எண்ணெய் - 100 மில்லி
கொத்தமல்லி இலை - 1/2 கப்
புதினா இலை- 1/4 கப்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 4
இஞ்சி - சிறுதுண்டு
தேங்காய் விழுது - கால் கப்
கரம்மசாலா தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை:
- மட்டனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாகிக் கொள்ளவும். இத்துடன் வெங்காயம், தனியாத்தூள், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்கவும்.
2. ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
3.வேகவைத்த மட்டனைச் சேர்த்து தண்ணீர் வற்றும்வரை அடுப்பில் வைத்திருக்கவும். இத்துடன் தேங்காய் விழுதைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.
4. உப்பை சரிபார்த்து கரம் மசாலா தூளைத் தூவி நன்கு கிளறி இறக்கவும். இப்போது மணக்கும் மதுரை மட்டன் மசாலா தயார்.
INGREDIENTS for Madurai mutton fry:
Mutton-1/2kg
Onion-2(Chopped)
Coriander Powder-2tsp
Ginger, Garlic Paset-11/2tsp
Chilly Powder-11/2tsp
Turmeric Powder-1/2tsp
Salt-Enough Need
INGREDIENTS for Seasoning:
Oil-100g
Coriander Leaves-1/2cup
Mint Leaves-1/4cup
Fennel-1tsp
Curry Leaves-little
Dry Chilly-4
Ginger-Little Piece
Grated Coconut-1/4cup
Garam Masala-1tsp
PROCEDURE to make Madurai mutton fry:
1. Wash and cut the mutton like a pieces. Then mix onion, coriander powder, ginger garlic paste, chilly powder, salt, water and boil them together in a pressure cooker. Heat oil in a pan, add fennel, curry leaves, dry chilly and let them splutter.
2. Add boiled mutton with this and cook till water gets dry. Then add grated coconut and let them for 5 minutes. Add salt, garam masala and stir them finely.
Now Madurai mutton masala is ready.