தேவையானவை :1. கேழ்வரகு மாவு - 3 கப்2. சர்க்கரை - 1 கப்3. உப்பு - தேவையானவை4. அரை மூடி துருவிய தேங்காய்5. நெய் - தேவைகேற்பசெய்முறை :ஒரு பாத்திரத்தில் கோழ்வரகு மாவு மற்றும் உப்பு போட்டு, லேசாக தண்ணீர் சேர்த்து புட்டு பதத்திற்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.பின்னர் இட்லி பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து கொதிக்க விட வேண்டும்.அதற்குள் ஒரு இட்லி துணியை நீரில் நனைத்து நீரை முற்றிலும் பிழிந்து, இட்லி தட்டில் விரித்து, பிரட்டி வைத்துள்ள கேழ்வரகு கலவையை இட்லி தட்டில் பரப்பி விட வேண்டும்.இட்லி பாத்திரத்தில் உள்ள நீரானது கொதிக்க ஆரம்பித்ததும், இட்லி தட்டை பாத்திரத்தினுள் வைத்து, மூடி வைத்து 20 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, சூடாக இருக்கும் போதே அத்துடன் சர்க்கரை, தேங்காய் துருவல் மற்றும் நெய் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சுவை மற்றும் சத்தான கேழ்வரகு புட்டு ரெடி
Weather Data Source: Wettervorhersage 21 tage