தேவையானவை :1. பாசுமதி அரிசி - 2 கப்2. பச்சைப் பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் சேர்த்த கலவை - ஒன்றரை கப்3. பெரிய வெங்காயம் - 24. தக்காளி - 25. பச்சை மிளகாய் - 36. மிளகாய் தூள் - ஒன்றரை டீஸ்பூன்7. மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்8. இஞ்சி-பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்9. புதினா - சிறிது10. கொத்தமல்லி - 1 கைப்பிடி11. நெய்யும் எண்ணெயும் சேர்த்து - 4 டேபிள்ஸ்பூன்12. உப்பு - தேவைக்கேற்ப13. வறுத்த முந்திரி - 814. கேசரி கலர் - 1 சிட்டிகை15. பாலில் கரைத்த குங்குமப்பூ - சிறிது16. தயிர் - அரை கப்17. எலுமிச்சை சாறு - தேவைக்கு.தாளிக்க தேவையானவை :1. பட்டை - ஒரு துண்டு2. கிராம்பு - 23. ஏலக்காய் - 24. அன்னாசிப்பூ - 15. மராட்டி மொக்கு -16. பிரியாணி இலை - 1அலங்கரிக்க தேவையானவை :1. நெய்யில் சிவக்க வறுத்த வெங்காயம் - 12. முந்திரி - 6
செய்முறை :1. முதலில் அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும். காய்களை விருப்பமான வடிவத்தில் நறுக்கவும்.2. ஒரு அடி கனமான பாத்திரத்தில் அல்லது குக்கரை அடுப்பில் வைத்து, நெய், எண்ணெய் சேர்த்து, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைச் சேர்க்கவும். பிறகு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், காய்கறிக் கலவை, மல்லி மற்றும் புதினா, கேசரி கலர் சேர்த்து நன்கு வதக்கவும்.3. வதக்கும்போதே காய்கறிகள் சிறிது வெந்துவிடும். பிறகு தயிர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பிறகு மூன்று கப் சூடான தண்ணீர் சேர்த்துக் கொதிக்கும் போது, அரிசி, உப்பு சேர்க்கவும். மிதமான தீயில் அரிசியை வேகவிடவும். இரண்டு கொதி வந்ததும், குக்கர் மூடியால் மூடாமல், வேறு ஒரு கனமான தட்டு போட்டு மூடி வேக விடவும். இடையில் இரண்டு முறை திறந்து, மெதுவாக அரிசியைக் கிளறி, குக்கரை இறக்கவும். அ4. அடுப்பின் மேல் ஒரு பழைய தோசைக்கல்லை வைத்து, அதன் மேல் குக்கரை வைத்து, மிதமான தீயில் மூடி போட்டு வேக விடவும். மூடிய குக்கரின் மேல் ஒரு கனமான பாத்திரம் அல்லது தண்ணீர் உள்ள பாத்திரத்தை வைக்கவும். இதுதான் தம் போடுவது. ஐந்து நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும். பிறகு மெதுவாகத் திறந்து பாலில் கரைத்த குங்குமப் பூ, எலுமிச்சை சாறு சேர்க்கவும். பரிமாறும் போது, வறுத்த வெங்காயம், முந்திரி சேர்த்து அலங்கரித்துக் கொடுக்கவும். பிறகு தயிர் பச்சடியுடன் சூடாகப் பரிமாறவும்.
Ingredients :
Basumathi Rice - 2 Cups
Green Peas , Potatoes, Beans, Carrot, Cauliflower etc - 1 1/2 Cup
Large Onion - 2
Tomato - 2
Green Chillies - 3
Red Chilli Powder - 1 1/2 tsp
Turmeric Powder - 1/4 tsp
Ginger Garlic Paste - 1 1/2 Tbsp
Mint - Handful
Coriander - Handful
Ghee + Oil - 4 tbsp
Salt - as needed
Fried Cashew Nuts - 8
Kesari Colour - 1 Pinch
Soaked saffron Milk - Little
Curd - Half Cup
Lemon - as needed
For Seasoning :
Cinnamon - 1 Piece
Cloves - 2
Cardamom - 2
Star Anise - 1
Maratti Mokku - 1
Bay Leaf - 1
For Decoration :
Fried Onion in ghee - 1
Cashew Nuts - 6
Method :
1. Rinse the rice very well in water till it runs clear of starch. then soak the rice for 30 mins in enough water. Cut the Vegestables.
2. Heat oil and Ghee in the pressure cooker or pan. Add the thinly sliced onions. saute them on a low to medium flame, till they get golden. Now add the gingergarlic paste to the 3/4 of the browned onions in the cooker or pan, stir and saute till the raw aroma of gingergarlic goes away. Now add the biryani masala & red chilli powder and all. Add the chopped vegetables, mind, coriander leaves, colour and stir.
3. Reduce the flame and add the yogurt slowly, stirring it. Now add 3 cups of hot water, rice and salt. stir very well. The close the lid with stronger plate. Dont close with cooker lid. Stir 2 to 3 three times in between.
4. Then heat the dosa pan in low heat then place the cooker on it. Then place a stonger pan with water. Allow it for 5 minutes. Turn off the stove and addsprinkle half of the mint leaves, 1 tbsp oil/ghee and the saffron milkalso add half of the fried onion evenly on this layer.
Serve along with curd onion.