தேவையானவை :
கோழிக்கறி - அரை கிலோ
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 4 டீஸ்பூன்
இஞ்சி (பொடியாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம் (நறுக்கியது)
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சம் பழச்சாறு - சிறிதளவு
சர்க்கரை - கால் டீஸ்பூன்
முட்டை - 1
சோயாசாஸ் - இரண்டு டீஸ்பூன்
அஜினோமோட்டோ - ஒரு சிட்டிகை
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
- மைதா, சோளமாவு, அடித்த முட்டை, மிளகாய்த் தூள், மிளகுத்தூள், அஜினோமோட்டோ, சோயா சாஸ், சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, போதுமான உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைக்கவும்.
- கோழிக்கறி துண்டுகளை இந்த மாவுக் கலவையில் தோய்த்து, காய்ந்த எண்ணெயில் போட்டு இரு புறமும் நன்றாக வெந்ததும் எடுத்து தனியே வைக்கவும்.
- ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
- பொரித்த சிக்கனையும் இதில் சேர்த்துக் கிளறி, குறைந்த தீயில் சில நிமிடங்கள் வைத்திருந்து கோழிக்கறி டிரை ஆனதும் இறக்கி விடவும். கோழிக்கறி பூண்டு மஞ்சூரியன்
Ingredients for Chicken Curry Garlic Manchurian :
Chicken Meat - 1 / 2 Kg,
Garlic - 4 Tsp(finely chopped),
Ginger - 2 Tsp(finely chopped),
Onion - 100 g(chopped),
Maida - 2 Tbsp,
Corn Flour - 1 Tbsp,
Lemon Extract - Little,
Sugar - 1 /4 Tsp,
Egg - 1,
Soya Sauce - 2 Tsp,
Ajinomotto - a pinch,
Pepper Powder - 1 Tsp,
Salt, Oil - as required.
Method for Chicken Curry Garlic Manchurian :
- Mix up the ingredients that are maida, corn flour, smashed egg, chilli powder, pepper powder, ajinomotto, soya sauce, sugar, lemon extract and salt all together. Mix it like a thick Bajji batter consistency.
- Coat the chicken pieces into this masala mixture. Take a frying pan then heat oil and fry this chicken mixture deeply. Allow it to fry for both sides well.
- Take a frying pan pour some oil , after boiled oil in a low steam and add finely chopped onions, gingers and garlics. Fry them till the green smells out.
- Add this fried chicken along with them. Toss it well in a low staem. Turn off the stove when fried chicken is got dry.
Chicken Curry Garlic Manchurian is ready to serve.