தேவையானவை:
கோழிக்கறி - அரை கிலோ
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
பொட்டுக்கடலை மாவு - ஒரு கையளவு
காஷ்மீர் மிளகாய்த்தூள் - இரண்டு டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - இரண்டு டீஸ்பூன்
தனியாத்தூள் - இரண்டு டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
- ஒரு அகலமான கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். பின் வெங்காயத்தையும் அதன் பின் இஞ்சி, பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கவும்.
- அதனுடன் சிக்கனைச் சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், தனியாத் தூள், மஞ்சள்தூள், போதுமான உப்பு, நீர் சேர்க்கவும். சிக்கன், மசாலாவுடன் சேர்ந்து நன்றாக வெந்து கெட்டியானதும் குறைந்த தீயில் சிறிது நேரம் வைக்கவும்.
- சிக்கன் நன்கு ட்ரை ஆனதும், பொட்டுக்கடலை மாவைப் போட்டுப் பபிரட்டவும், பொட்டுக்கடலைத் தூளில் பச்சை வாசனை போனதும் இறக்கிவிடவும்.ஆந்திரா கோழிக்கறி வறுவல் தயார்.
Ingredients for Andhra Chicken Curry Fry :
Chicken Meat - 1 /2 kg,
Sambar Onion - 200 g,
Roasted Gram - little ,
Kashmir Chilli Powder - 2 tsp,
Ginger, Garlic Paste - 2 tsp,
Coriander Powder - 2 tsp,
Turmeric Powder - 1 /4 tsp,
Curry Leaves - little,
Oil and Salt - as required.
PROCEDURE to make Andhra Chicken Curry Fry:
- Take a wide Frying pan , pour some oil and allow it to boil then add curry leaves then season it well. Then add onions, ginger-garlic paste along with them and allow it to fry deeply.
- Then add chicken along with them and fry it well. Then add chilly powder, coriander powder, turmeric powder, salt and water.When chicken cooked well together with masala, then allow low flame for few minutes.
3.When chicken comes to a thick consistency ,mix roasted gram powder and stir well. When the fresh smell out, then turn off the stove. Andhra chicken curry fry is ready to serve.