காலையில் 100 கிராம் பச்சை பயிறை ஒரு பாத்திரத்தில் இட்டு தண்ணீரில் விட்டு ஊற வையுங்கள்.மாலையில் அந்த தண்ணீரை வடித்துவிட்டு காற்றுபுகாத ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வையுங்கள் காலை எழுந்து பாத்திரத்தை திறந்து பார்த்தால் பச்சைப் பயிறு முளைத்திருக்கும்.இத்துடன் சிறிய வெங்காயத்தைப் பொடியாக அரிந்து அதனுடன் சேர்த்து, குறுமிளகுப் பொடியைச் சேர்த்து காலை உணவாக உண்ணுங்கள்.(தயவு செய்து உப்பு சேர்க்க வேண்டாம்). இதே போல் கொண்டைக் கடலை (சுண்டல்), கொள்ளு போன்றவற்றையும் முளைகட்டிச் சாப்பிடலாம்.புரோட்டின் அதிக அளவில் இருக்கும் இவ்வுணவு மிகவும் சத்தானது.
Weather Data Source: Wettervorhersage 21 tage