தேவையானவை :1. வல்லாரை கீரை – அரை கட்டு2. உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன்3. காய்ந்த மிளகாய் – 24. மிளகு – 1/4 டீஸ்பூன்5. புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு6. வெல்லம் – சிறிதளவு7. எண்ணெய் – தேவைகேற்ப8. உப்பு – தேவைகேற்ப9. கடுகு – சிறிதளவு10. கறிவேப்பில்லை – சிறிதளவு
செய்முறை :1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சுத்தம் செய்து நறுக்கிய கீரை போட்டு வதக்கி எடுத்து வைத்து கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகு, சேர்த்து பொன்னிறமாக வருத்து ஆறியதும் இரண்டு கலவையும் சேர்த்து உப்பு, புளி சேர்த்து சட்னி பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.2. பிறகு, கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பில்லை போட்டு தாளித்து அதில் சேர்த்து இறக்கினால் சுவையான, சத்தான வல்லாரை கீரை சட்னி ரெடி...