தயிர் ரசம்

post-img

தேவையானவை :

1. புளித்த தயிர் - ஒரு கப்2. தண்ணீர் - அரை கப்3. மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்4. உப்பு - தேவையான அளவுவறுத்து அரைப்பதற்கு :1. ஸ்பூன் துவரம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன்2. மிளகு - ஒரு டீஸ்பூன்3. சீரகம் - ஒரு டீஸ்பூன்தாளிப்பதற்கு :1. எண்ணெய் - ஒரு டீஸ்பூன்2. கடுகு - ஒரு டீஸ்பூன்3. சீரகம் - அரை டீஸ்பூன்4. பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்5. வரமிளகாய் - 16. கறிவேப்பிலை - சிறிதளவு

 

செய்முறை:

1. ஒரு வாணலியில் வறுத்து அரைப்பதற்கு மேலே கொடுத்துள்ள பொருட்களை போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.2. பிறகு புளித்த தயிரை தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.3. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து, பின் கலந்து வைத்துள்ள புளித்த தயிர் கலவையை அத்துடன் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கினால், சூடான சுவையான தயிர் ரசம் ரெடி!!!

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER