உருளைக்கிழங்கு மிளகு வறுவல் (Urulaikilangu Pepper Fry)

post-img

தேவையானவை :

1. உருளைக்கிழங்கு – 200 கிராம்2. மிளகு – ஒரு டீஸ்பூன்3. மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்4. தனியாத்தூள் – 2 அல்லது 3 டீஸ்பூன்5. மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்6. வெங்காயம் – 17. சீரகம் – அரை டீஸ்பூன்8. காய்ந்த மிளகாய் – 39. கறிவேப்பிலை – சிறிது10. எண்ணெய் – இரண்டு டேபிள்ஸ்பூன்11. உப்பு – தேவைக்கேற்ப.

 

செய்முறை:

முதலில் ஒரு டீஸ்பூன் மிளகை  மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கை போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து, தோலை உரித்து விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்..வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் உருளைக் கிழங்கைப் போட்டு சற்று வதக்கவும்.அதன் பின் அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி விடவும்..அனைத்து சேர்த்து வரும் போது கடைசியில் மிளகுத்தூளைத் தூவி, மீண்டும் நன்றாகக் கிளறி விடவும்.அடுப்பை சிறு தீயில் வைத்து, உருளைக்கிழங்கை அடிக்கடி திருப்பி விட்டு 5 முதல் 10 நிமிடங்கள் வரை அல்லது கிழங்கு பொன்னிறமாகும் வரை வைத்திருந்து எடுக்கவும்.சுவையான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.

Required:
1. Potatoes - 200 g
2. Pepper - a teaspoon
3. Chili - a teaspoon
4. Powder - 2 or 3 tbsp
5. Turmeric powder - a quarter teaspoon
6. Onions - 1
7. Cumin - half a teaspoon
8. Dried chillies - 3
9. Curry leaves - a little
10. Oil - two tablespoons
11. Salt - as needed.

Recipe:
First put a teaspoon of pepper in the mix and grind until smooth.
Put the potatoes in a bowl, pour water and bring to a boil, peel and cut into small pieces.
Chop the onion into powder. Put the pan in the oven, pour oil and when it is hot, add cumin, curry leaves, dried chillies and then add the onion..
When all is combined, sprinkle the pepper at the end and stir well again.
Put the oven on low heat, turn the potatoes frequently and keep for 5 to 10 minutes or until the potatoes are golden brown.
Delicious Potato Pepper Roast Ready.

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER