தேவையானவை :
1. முருங்கைக்காய் - 1 (துண்டுகளாக்கியது)2. வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)3. தக்காளி - 4 (மென்மையாக அரைத்தது)4. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்5. குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்6. கடுகு - 1 டீஸ்பூன்7. உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்8. கறிவேப்பிலை - சிறிது9. உப்பு - தேவையான அளவு10. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.2. பின்னர் அதனுடன் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் முருங்கைக்காயை சேர்த்து ஐந்து நிமிடம் நன்கு வதக்க வேண்டும். பின்பு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து கிளறி, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து சுவை பார்த்து, வேண்டுமெனில் சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.3. பிறகு வாணலியை மூடி வைத்து பத்து நிமிடம் நன்கு குழம்பை கொதிக்க விட வேண்டும். பின் மூடியை திறந்து, காய்கறி வெந்துவிட்டதா என பார்க்கவும். காய் நன்கு வெந்துவிட்டால், அடுப்பில் இருந்து வாணலியை இறக்கினால் சுவையான தக்காளி முருங்கைக்காய் குழம்பு ரெடி!!!
Required:
1. Drumstick - 1 (sliced)2. Onion - 1 (finely chopped)3. Tomatoes - 4 (finely ground)4. Turmeric powder - 1/4 tsp5. Broth chili powder - 1 tbsp6. Mustard - 1 tbsp7. Lentils - 1/2 tsp8. Curry leaves - a little9. Salt - required amount10. Oil - required amount
Recipe:
1. Put a frying pan in the oven, pour oil in it and season with mustard, lentils and curry leaves.
2. Then add onion and fry till golden brown, then add drumsticks and fry well for five minutes. Then add the crushed tomatoes, stir in the turmeric powder, chilli powder and salt to taste and add a little water if desired.
3. Then cover the pan and let the broth boil well for ten minutes. Then open the lid and see if the vegetable is cooked. Once the fruit is well cooked, remove the pan from the oven and the delicious tomato drumstick broth is ready!