குதிரைவாலி கேப்பைக் கூழ்

post-img

தேவையானவை :1. கேழ்வரகு மாவு - 200 கிராம்2. குதிரைவாலி அரிசி - 50 கிராம்3. தயிர் - 1/4 கப்4. பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - தேவையான அளவுசெய்முறை :1. முந்தைய நாள் இரவே கேழ்வரகு மாவில் தண்ணீர் ஊற்றி, தோசை மாவுப் பதத்துக்குக் கரைத்து மூடிவைக்கவும். நன்றாகப் புளித்துவிடும். பிறகு குதிரைவாலி அரிசியை நன்றாகக் களைந்து தண்ணீர்விட்டு வேக வைத்துக்கொள்ளவும். அரைப் பதத்தில் வெந்ததும், ஊறவைத்த கேழ்வரகு மாவைச் சேர்த்து கெட்டியாகும் வரை மிதமான தீயில் அடுப்பில் வைத்துக் கிளறவும்.2. தண்ணீரில் கையை நனைத்துவிட்டு, கூழைத் தொட்டுப்பார்த்தால், அது கையில் ஒட்டாமல், அல்வா பதத்தில் இருக்கவேண்டும்.3. பிறகு, கால் கப் தயிர், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், வெந்த கூழ் மூன்றையும் சேர்த்து, தேவையான உப்பு போட்டு, தண்ணீர் விட்டுக் கரைத்தால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய குதிரைவாலி கேப்பைக் கூழ் ரெடி!!குதிரைவாலி கேப்பைக் கூழின் பயன்கள் :1. இந்த கூழில் கால்சியம் இருப்பதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்புச்சத்து இருப்பதால் ரத்த உற்பத்திக்கு உதவும். கொழுப்பைக் குறைக்கும். குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும்.2. கேழ்வரகு உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தந்து வலுவைச் சேர்க்கும். எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் சாப்பிடலாம்.3. பெண்கள், இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்ல உணவு.

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER