மஞ்சள் ஊறுகாய்

post-img

தேவையானவை :

1. தோல் சீவி துண்டமாக நறுக்கிய பச்சை மஞ்சள் - ஒரு கப்

2. தோல் சீவி துண்டமாக நறுக்கிய இஞ்சி - அரை கப்

3. மாங்காய் இஞ்சி நறுக்கியது - அரை கப்

4. பெரிய எலுமிச்சை பழம் - 5

5. பச்சை மிளகாய்  - 10 (காரம் அதிகமாக தேவைப்படுபவர்கள்  மேலும் 4 அல்லது 5 சேர்த்துக்கொள்ளவும்)

6. உப்பு தேவையான அளவு

7. பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன்

8. நல்லெண்ணெய் - அரை கப்

9. மிளகாய்த் தூள் - 3 டீஸ்பூன்

10. சர்க்கரை - ஒரு டீஸ்பூன்

11. கடுகு, வெந்தயப் பொடி - ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை :

 ஊறுகாய் போட்ட உடனே சாப்பிட வேண்டுமெனில் நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொண்டு மஞ்சள், இஞ்சி,மாங்காய் இஞ்சி, பச்சை மிளகாயைக் கொஞ்சம் வதக்கிக் கொள்ளவும்

.2. வதக்கியதில் உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள் சேர்த்துக் கொண்டு எலுமிச்சம்பழத்தைச் சாறு எடுத்துச் சேர்த்துக் கலக்கவும். மீதம் உள்ள எண்ணெயைச் சுட வைத்துப் பின் ஆற வைத்துச் சேர்க்கவும்.

3. வெளியில் வைத்தால் இரண்டு நாட்களும், குளிர் சாதனப் பெட்டியில் வைத்தால் ஒரு வாரமும் இதை வைத்திருக்கலாம். வதக்காமல் பச்சையாகவே எலுமிச்சைச் சாறு உப்பு, பெருங்காயம், பச்சை மிளகாய் சேர்த்துக் கலந்தும் வைத்துச் சாப்பிடலாம்.

4. கொஞ்ச நாட்கள் வைத்திருக்க வேண்டுமானால் மேற்சொன்னபடி நறுக்கிய காய்களைக் கலந்து கொள்ளவும். எலுமிச்சையைப் பொடித்துண்டமாக நறுக்கிச் சேர்க்கவும். சின்னதாக இருந்தால் ஆறு எலுமிச்சையையும், பெரிதாக இருந்தால் மூன்று எலுமிச்சையையும் நறுக்கிச் சேர்க்கவும்.

5. மீதம் உள்ள எலுமிச்சையில் சாறு எடுத்துக் காய்களோடு கலக்கவும். உப்பு, பெருங்காயத் தூள், மிளகாய்த் தூள், சர்க்கரை, கடுகு, வெந்தயப் பொடி ஆகியவற்றையும் சேர்த்துக் கலக்கவும்.

6. அடுத்த நாள் கொஞ்சம் நீர் விட்டிருக்கும். கிளறி விட்டு விட்டு நல்லெண்ணெயைக் காய வைத்து ஆற விட்டு ஊறுகாயில் சேர்க்கவும். வினிகர் வாசனை பிடித்தமெனில் வைட்  குக்கிங்  வினிகர் வாங்கி ஒரு டேபிள் ஸ்பூன் அல்லது மூன்று டீஸ்பூன் சேர்க்கவும். இதை வெளியேயே வைத்திருக்கலாம்.

7. வினிகர் ஊற்றுவதால் சீக்கிரம் கெடாது. எங்களுக்கு வினிகர் வாசனை பிடிக்காது. பொதுவாக ஊறுகாய்களைக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது இல்லை. ஆனால் இந்த ஊறுகாய் சீக்கிரம் பயன்படுத்த வேண்டும். ஆகவே இந்த ஊறுகாயை மட்டும் எண்ணெய் ஊற்றிக் கிளறி விட்டுக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பின்னர் சாப்பிடும் முன்னர் வெளியே எடுத்து வைத்து விட்டுப் பரிமாறலாம்.

 

 

Required:

  1. Peel a squash, grate it and squeeze the juice
    2. Peeled Ginger - Half a cup
    3. Mango Ginger Chopped - Half a cup
    4. Large lemon fruit - 5
    5. Green Chillies - 10 (For those who need more salt add 4 or 5 more)
    6. The required amount of salt
    7. Pumpkin powder - half a teaspoon
    8. Butter - half a cup
    9. Chili Powder - 3 tbsp
    10. Sugar - a teaspoon
    11. Mustard, dill powder - a tablespoon

Recipe:
1. If you want to eat pickles immediately, pour a tablespoon of hazelnut oil and fry turmeric, ginger, mango ginger and green chillies.
2. Add salt, eggplant powder, chilli powder and lemon juice and mix well. Heat the remaining oil and add it to the pan.
3. It can be kept outside for two days and in the refrigerator for a week. Lemon juice can be eaten raw without adding salt, apricots and green chillies.4. Mix the chopped nuts as mentioned above if you want to keep it for a few days. Chop the lemon into powder and add. Add six lemons if iconic and three lemons if large.
5. Take the juice of the remaining lemon and mix it with the pods. Add salt, eggplant powder, chilli powder, sugar, mustard and dill powder.
6. Have a little water the next day. Stir and leave the butter to dry, cure and add to the pickle. If you like the smell of vinegar buy white cooking vinegar and add a tablespoon or three teaspoons. You can keep this out.
7. Pouring vinegar does not spoil quickly. We do not like the smell of vinegar. Usually pickles are not kept in the refrigerator. But this pickle should be used as soon as possible. So you can just pour the oil over the pickle and keep it in the fridge and then take it out before eating and serve

 

Related Post

post-img

வடைகறி

post-img

புல்கா - Pulka

post-img

ரவை அடை

post-img

KODI_VEPUDU_WITH_PEPPER