தேவையானவை :
1. கம்பு மாவு - ஒரு கப்
2. சாதம் ஊற வைத்த தண்ணீர் - தேவையான அளவு
3. சின்ன வெங்காயம் - 5 (பொடித்தது)
4. பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
5. மோர் - ஒரு கப்
6. சாதம் - ஒரு கப்
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் சாதம் ஊற வைத்த நீரில் கம்பு மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கரைத்து, ஏழு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்ரை அடுப்பில் வைத்து, அதில் கரைத்து வைத்துள்ள கம்பு நீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, அடிப்பிடிக்காமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
2. அப்படி கிளறும் போது கலவையானது களி போன்று வரும் போது, அதனை இறக்கி வேறு பாத்திரத்தில் போட்டு நன்கு குளிர வைக்க வேண்டும்.
3. இறுதியில் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், மோர் மற்றம் சாதம் சேர்த்து நன்கு கரைத்தால், கம்பு கூழ் ரெடி!!! இந்த கூழை மண் சட்டியில் வைத்து குடித்தால் சுவை இன்னும் அதிகமாக இருக்கும்.