தேவையானவை :
- பெரிய கிளி மூக்கு மாங்காய் - 42. வெந்தயம் - 1 டீஸ்பூன்3. காய்ந்த மிளகாய் - 164. கடுகு - 1/2 டீஸ்பூன்5. மஞ்சள் பொடி -1/2 டீஸ்பூன்6. நல்லெண்ணெய் - 100 மி.லி7. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
- முதலில் மாங்காய்களை நடுத்தர துண்டுகளாக(பெரியதாக அல்லாமல் சிறியதாகவும் அல்லாமல் இருக்க வேண்டும்) வெட்டிக் கொள்ள வேண்டும். வெட்டிய துண்டுகளுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக குலுக்கி விட்டு வெயிலில் மூன்று அல்லது நான்கு நாட்கள் உலரவிடவும். மாங்காய் ஓரளவு காய்ந்து விடும்.
- அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி வெந்தயம் மற்றும் மிளகாயை அதில் போட்டு பொன்னிறமாக வறுத்து சூடு ஆறியதும் மிக்சியில் அரைத்து கொள்ளவும். இந்த பொடியை காய வைத்த மாங்காயுடன் கலந்து நன்கு குலுக்கி விடவும்.
- மீதமுள்ள நல்லெண்ணையை நன்கு சுட வைத்து அதில் கடுகை தாளித்து அதனுடன் மஞ்சள் பொடியை கலந்து, உடனே எடுத்து மாங்காயுடன் கலந்து கிளறினால் சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி!!!