தேவையானவை :
ஆட்டிறைச்சி - அரை கிலோ
தனியா விதை - 2 டீஸ்பூன்
வெங்காய விழுது - 1 டீஸ்பூன்
லவங்கம் - 4
வெங்காய விதை - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
இஞ்சி விழுது - 1 டீஸ்பூன்
கசகசா - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தயிர் - 3 டீஸ்பூன்
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகு - 8
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை :
1. மட்டனை ஒரு அங்குல சதுர துண்டுகளாக நறுக்கவும். தயிரை அடித்து, வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து ஆட்டிறைச்சி துண்டுகளில் தடவி, ஊற வைக்கவும்.
2. தனியா, கசகசா, சீரகம், வெங்காய விதை, லவங்கம், மிளகு இவற்றை வெறுமனே வறுத்துப் பொடி செய்யவும்.
3. தேவையான அளவு உப்பை இதில் சேர்த்துக் கலந்து ஆட்டிறைச்சி துண்டுகளில் புரட்டி வைக்கவும். இதை ஆறிலிருந்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.
4. ஒரு கடாயில் எண்ணையைக் காய வைத்து காய்ந்ததும், ஊற வைத்த மட்டனைப் பொரித்தெடுக்கவும்.
5. வெங்காயத்தை வட்டமாக நறுக்கி, மட்டன் டிக்கா மசாலாவை அலங்கரிக்கவும்.
Ingredients for Mutton Ticka Masala :
Mutton Meat - 1 /2 Kg,
Coriander Seeds - 2 Tsp,
Onion Paste - 2 Tsp,
Cinnamon - 4,
Onion seeds - 4 Tsp,
Onion - 1,
Ginger Paste - 1 Tsp,
Poppy Seeds - 2 Tsp,
Cumin - 1 Tsp,
Curd - 3 Tsp,
Garlic Paste - 1 Tsp,
Pepper - 8,
Salt, Oil - as required.
Method for Mutton Ticka Masala :
1. Dice the mutton into 1 feet sized square pieces. Smash the curd with onion and ginger, garlic paste. Coat this paste on mutton pieces. Soak this mixture for 10 minutes.
2. Take Coriander, Poppy Seeds, Cumin Seeds, Onion Seeds, Cinnamon and Pepper and grind this as dry powder.
3. Add salt along with them then apply this powder on mutton meat mixture. Soak this mixture for 6 to 10 hours.
4. Heat Oil in a Frying Pan and fry this meat mixture deeply.
5. Slice the Onion and decorate the Mutton Masala Ticka.