தேவையானவை :
1. பச்சரிசி - ஒரு கப்
2. துவரம்பருப்பு - கால் கப்
3. கடலைப்பருப்பு - ஒரு பிடி
4. பயத்தம்பருப்பு - ஒரு பிடி
5. கொண்டைக்கடலை, உளுத்தம்பருப்பு - இரண்டும் சேர்த்து ஒரு பிடி
6. மசூர்தால், காராமணி, நிலக்கடலை - மூன்றும் சேர்த்து ஒரு பிடி
7. மிளகாய் வற்றல் - 10
8. பெரிய வெங்காயம் - 2
9. கறிவேப்பிலை - 2 கொத்து
10. பெருங்காயப்பொடி - சிறிதளவு
11. உப்பு - தேவையான அளவு
12. நல்லெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மற்ற தேவையான அனைத்து பொருட்களையும் தயார்படுத்தி வைக்கவும். அரிசி, பருப்புகளை ஒன்றாக சேர்த்து, மிளகாய் வற்றலுடன் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊற வைத்த அரிசி, பருப்பு கலவையை மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைக்கவும். உப்பு, பெருங்காயப்பொடி, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும். கனமான அடைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை சற்று கனமாக ஊற்றி, நடுவில் ஒரு சிறிய ஓட்டை போட்டு நல்லெண்ணெய் விடவும். நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு எண்ணெய் விட்டு மொறுமொறுப்பானதும் எடுத்தால் சுவையான நவதானிய அடை ரெடி.