தேவையானவை :1. காலிஃபிளவர் - ½ கிலோ2. சோம்பு - 1 டீஸ்பூன்3. தேங்காய் - ½ முடி4. ஏலக்காய் - 15. இஞ்சி - 1 (சிறிய துண்டு)6. மிளகாய் வற்றல் - 67. பூண்டு - 5 பல்8. எண்ணெய் - 1 குழிக்கரண்டி9. கிராம்பு - 110. கசகசா - 1 மேஜைக்கரண்டி11. பட்டை - 112. சின்னவெங்காயம் - 2013. தக்காளி - 114. முந்திரிப்பருப்பு - 1015. குடைமிளகாய் - 1 (சிறியது)16. உப்பு - தேவையானது
செய்முறை :1. முதலில் காலிஃபிளவர், குடைமிளகாய், தக்காளி, வெங்காயம் ஆகியவற்றைப் பொடிப் பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி, பூண்டு, ஏலம், சோம்பு, கிராம்பு, பட்டை, மிளகாய் வற்றல், கசகசா, தேங்காய் எல்லாவற்றையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.2. பிறகு அடுப்பில் வாணலியை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்கிய பின் குடைமிளகாய், காலிஃபிளவரை வதக்கி அரைத்த மசாலை ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்து வெந்தபின் இறக்கினால் சுவையான சுவையான காலிஃபிளவர் சட்னி தயார்.