தமன்னா எனக்கு அம்மா மாதிரி..! சொன்னது யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்..!

post-img
Tamanna Bhatia : தமன்னா எனக்கு அம்மா மாதிரி என்று திரைப்பிரபலம் ஒருவர் சொல்லியிருக்கிறார். இது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. நடிகை தமன்னா தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல் தற்போது பாலிவுட்டிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். அவர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினால் அந்த படம் பெரிய ஹிட் அடிக்கிறது என்று பாலிவுட் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. அதனால் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினால் போதும் என கோடிகளை கொண்டு சென்று தமன்னாவின் சுறுக்கு பையில் கொட்டுகிறார்கள். இது ஒரு பக்கமிருக்க, நடிகை தமன்னா அவருடைய காதலர் விஜய் வர்மா ஆகியோரின் திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை ரவீனா டாண்டனின் மகள் ரஷா தடானி சமீபத்திய பேட்டி ஒன்றில் தமன்னா பற்றி பேசி இருக்கிறார். அவர் கூறியதாவது, தமன்னா என்னுடைய வளர்ப்பு தாய் போன்றவர். My Adobted Mom என கூறியிருக்கிறார். இந்நிலையில், தமன்னாவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post